ஒரு கிராமத்திற்காக 12 கிராமங்களை வழங்கிய இந்தியா - எந்த நாட்டிற்கு தெரியுமா?
ஒரு கிராமத்திற்காக இந்தியா 12 கிராமங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளது.
ஹூசைனிவாலா
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஹூசைனிவாலா. சுதந்திரத்திற்கு முன்பு ஹுசைனிவாலா கிராமம் பாகிஸ்தானின் வசம் சென்றது. ஆனால் இந்தியா அதை விரும்பவில்லை.
இதன் காரணமாக அந்த ஒரு கிராமத்திற்கு பதிலாக பஞ்சாபின் 12 கிராமங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்தது. இந்த கிராமத்திற்கு, புகழ்பெற்ற பீர் குலாம் ஹூசைனிவாலாவின் நினைவாக பெயர் வைக்கப்பட்டது. இங்குள்ள வளாகத்தில் அவரது கல்லறை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சுதந்திரப் போராட்ட வீரர்கள்
சுதந்திர போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோரின் உடல்கள் லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்ட மறுநாள், ஹுசைனிவாலா கிராமத்தில் உள்ள ஷத்ரு நதிக்கரைக்கு பிரிட்டிஷ் படைகளால் தகனம் செய்வதற்காக இரகசியமாக கொண்டு செல்லப்பட்டது.
உடனே, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஷத்ரு நதிக்கரையில் உள்ள சுடுகாட்டில் கூடியுள்ளனர். இதனைக் கண்டு மூன்று புரட்சியாளர்களின் உடலை விட்டு படைகள் தப்பி ஓடிய பின்னர், கிராம மக்கள் மூன்று தேசபக்தர்களையும் அங்கு மரியாதையுடன் தகனம் செய்துள்ளனர்.
அதன்பின், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோரின் கல்லறைகளுக்கு மக்கள் மரியாதை செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.