இரண்டாவது போட்டியிலும் இந்தியா தோல்வி - கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!

Rishabh Pant Indian Cricket Team Dinesh Karthik
By Thahir Jun 13, 2022 03:02 AM GMT
Report

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், 4 தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்றது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சொதப்பிய பேட்ஸ்மேன்கள்

இதனையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 1 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இரண்டாவது போட்டியிலும் இந்தியா தோல்வி - கழுவி ஊற்றும் ரசிகர்கள்..! | India Lost The Second Match

21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நோர்ட்ஜெ பந்துவீச்சில் கிஷன் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இந்திய அணி சரிவை நோக்கி சென்றது.

இறுதி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அதிரடி காட்ட இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.

அதிரடி காட்டிய தென் ஆப்ரிக்கா வீரர்கள்

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில், ஹெண்டிரிக்ஸ், பிரிட்டோரியஸ் தலா 4 ரன்கள் எடுத்து வெளியேற வாண்டர் டூ சென் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் பவுமா, கால்சென் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது.

இந்த ஜோடியில் பவுமா 35 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடி காட்டி வந்த கால்சென் 46 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இரண்டாவது போட்டியிலும் இந்தியா தோல்வி - கழுவி ஊற்றும் ரசிகர்கள்..! | India Lost The Second Match

முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 18.2 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டேவிட் மில்லர் 20 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்று முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.


ஐபிஎல் ஒளிபரப்பு - 43 ஆயிரம் கோடியைத் தாண்டிய ஏல மதிப்பு!