ஐபிஎல் ஒளிபரப்பு - 43 ஆயிரம் கோடியைத் தாண்டிய ஏல மதிப்பு!

Cricket IPL 2022
By Sumathi Jun 12, 2022 07:57 PM GMT
Report

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அண்மையில், 15 வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது.

ஐபிஎல்

முதல் முறையாக பங்கேற்ற குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. தற்போது மொத்தம் 10 அணிகள் போட்டியில் பங்கேற்று விளையாடுகின்றன.

ஐபிஎல் ஒளிபரப்பு - 43 ஆயிரம் கோடியைத் தாண்டிய ஏல மதிப்பு! | Ipl Broadcasting Rights Bid Worth Over 43000 Crore

ஐபிஎல் தொடர் தற்போது பல நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஐபிஎல் தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்ற ஒவ்வொரு முறையும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

பிசிசிஐ

முதல் 10 ஆண்டுகளில் சோனி பிக்சர்ஸ் குழுமம் ரூ.8,200 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருந்தது . அதை தொடர்ந்து கடந்த அடுத்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.16,347 கோடிக்கு

ஸ்டார் இந்தியா, டிஸ்னி நிறுவனம் ஆகியவை தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை பெற்றது. முதல் முறையாக 2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான

ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிசிசிஐ பிரித்து வழங்க இருக்கிறது. மும்பையில் ஏலத்துக்கான டெண்டர் விண்ணப்பம் வாங்கி, அவற்றை சமர்ப்பித்த தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு,

பிசிசிஐ நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்பதற்கான ஆன்லைன் இணைப்பை வழங்கினார்கள். இன்றைய ஏல நாள் முடிவில் இந்த ஒளிபரப்பு உரிமை ரூ.43 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.

2023-2027 காலகட்டத்தில் மொத்தம் 410 ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை ஒளிபரப்பும் உரிமையைப் பெற டிஸ்னிஸ்டார், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா, வயாகாம்18,

ஜீ எண்டெர்டெயின்மென்ட் என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.