உலகிலேயே இந்தியா தான் கடைசி இடத்தில் உள்ளது.. வெறும் 1% - எந்த விஷயத்தில் தெரியுமா?

India Divorce World
By Vinothini Sep 19, 2023 06:42 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா கடைசி இடத்தை பிடித்துள்ளது.

உலக நாடுகள் பட்டியல்

இந்த காலகட்டத்தில் அதிகமான தம்பதிகள் திருமணம் ஆன சில நாட்களிலேயே கணவன் மனைவி பிரிந்து விவாகரத்து பெறுகின்றனர். தற்பொழுது உலகிலேயே அதிக விவாகரத்தை பெறும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா மிகக் குறைந்த சதவீதத்துடன் கடைசி இடத்தை பிடித்திருப்பது இந்திய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

india-last-place-in-divorce-global-index

இந்தியாவில் விவாகரத்து சதவீதம் வெறும் 1% ஆக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் வியட்நாம் கடைசியில் இருந்து இரண்டாவது நாடாக இருக்கிறது. இங்கு 100ல் 7 திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவாகரத்து

உலகிலேயே அதிக விவகாரத்தை பெறும் நாடாக ஐரோப்பா நாடான போர்ச்சுக்கல் மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு 94 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இந்துக்கள், புத்த மதத்தை பின்பற்றுவோர், ஜெயினர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோர் இந்து மத சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்து பெருகின்றனர். முஸ்லிம்களுக்கு விவாகரத்து பெற 1939-ல் கொண்டு வரப்பட்ட சட்டம் உள்ளது.

india-last-place-in-divorce-global-index

பார்சி இனத்தை சேர்ந்தவர்களுக்கு 1936 இல் கொண்டுவரப்பட்ட விவாகரத்துச் சட்டமும், கிறிஸ்தவர்களுக்கு 1869ல் கொண்டுவரப்பட்ட சட்டமும் விவாகரத்தை வழங்குகின்றன. உலகிலேயே மிகக் குறைந்த அளவில் விவாகரத்து நடக்கும் நாடாக இந்தியா மதிப்பிடப்பட்டு இருப்பது பெருமை அளிப்பதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.