Asia Cup 2023: இலங்கையை துவம்சம் செய்து 8வது முறையாக கோப்பையை வென்றது இந்தியா!!
ஆசிய கோப்பை 2023 தொடரில் 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா.
ஆசிய கோப்பை
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் இனைந்து நடத்துகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.
இதில் சூப்பர்4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த, இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பைனலுக்கு முன்னேறின. இன்று (செப்டெம்பர் 17) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கும் பைனலில் இரு அணிகளும் மோதினர். டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கினர். ஆரம்பம் முதலே இந்தியாவின் பந்துவீச்சில் இலங்கை அணி தடுமாறியது.
சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதில் இலங்கை அணி நிலைகுலைந்தது. ஜாஸ்பிரிட் பும்ரா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பிறகு பந்து வீசிய ஹார்திக் பாண்டியா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 15.2 ஓவரில் வெறும் 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் 17 ரன்னும் , துஷான் ஹேமந்தா 13 ரன்னும் எடுத்திருந்தனர்.
இந்தியா வெற்றி
இதனை தொடர்ந்து 51 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 6.1 ஓவர்களில் 51 ரன்களை விக்கெட் ஏதும் இழக்காமல் 51 ரன்கள் அடித்து வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.
ஒப்பனர்களாக களம் இறங்கிய சுப்மன் கில் 19 பந்துகளில் 27 ரன்னும், இஷான் கிஷன் 18 பந்துகளில் 23 ரன்னும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 8வது ஆசிய கோப்பையை இந்தியா வென்றுள்ளது.