இவ்வளவு வசதிகளா..? இனி ChatGPT இல்ல...வந்தாச்சு BharatGPT..!
ChatGPT செயலியை போல, தற்போது இந்தியாவின் BharatGPT விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
BharatGPT
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் இந்தியாவின் முன்னணி பொறியியல் நிறுவனங்களால் ஆரம்பகட்ட ChatGPT பாணி சேவையை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது.
செயற்கை நுண்ணறிவு துறையில் தங்களது இருப்பை நிலைநாட்டுவதற்கான நாட்டின் இது துவங்கப்படுகிறது. BharatGPT என்று பெயரிடப்பட்ட இது, நேற்று(20-02-2024) மும்பையில் நடந்த தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலியின் விளக்கத்தின் போது, ஹனூமன் என்று பெயரிடப்பட்ட இந்த மாடல் வெற்றி பெற்றால், AI தொழில்நுட்பத்திலும் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் பெரும் என நம்பப்படுகிறது.