பழிவாங்க காத்திருக்கும் ஆஸ்திரேலியா; இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறும் - ரவி சாஸ்திரி

Indian Cricket Team Australia Cricket Team Ravi Shastri
By Sumathi Aug 14, 2024 11:30 AM GMT
Report

இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமென ரவி சாஸ்திரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

வரலாறு படைக்குமா?

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வரும் நவம்பர் 22ஆம் தேதி முதல் பங்கேற்கவுள்ளது. 2018ல் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

indian cricket team

இதில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்தியா வென்றால் மட்டுமே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 தொடருக்கான பைனலுக்கு முன்னேற, வாய்ப்பு அதிகமாக இருக்கும். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் பயிற்சியாளரும், கிரிக்கெட் வீரருமான ரவி சாஸ்திரி, பும்ரா, ஷமி உடல்நிலை நன்றாக இருக்கிறது.

சிராஜும் இருக்கிறார். இவர்களுடன் அஸ்வின், ஜடேஜா மாதிரியான் ஆள்களும் இருக்கிறார்கள். இந்திய அணியில் வலுவான வீரர்கள் இருக்கிறார்கள. இந்தியாவுடன் நல்ல பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். பேட்டிங் மட்டும் நன்றாக செய்தால்போதுமானது மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி விடலாம்.

பிரபல பாடகியுடன் காதலில் ஹர்திக் பாண்டியா? கசிந்த ரகசியம்!

பிரபல பாடகியுடன் காதலில் ஹர்திக் பாண்டியா? கசிந்த ரகசியம்!

ரவி சாஸ்திரி உறுதி

கடைசி 5-8 வருடங்களில் இந்த இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டிகள் எவ்வளவு சிறப்பாக இருக்கின்றன என்பது தெரியும். அதனால் பார்டர் கவாஸ்கர் டிராபி மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா பழிதீர்க்க காத்திருக்கும். இரண்டுமுறை தோல்வியுற்றதால் ஆஸி. அணி மிகுந்த ஆவலுடன் இருப்பார்கள்.

ravi shastri

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்களை இந்தியா எப்படி சமாளிக்குமென்பது முக்கியமான காரணியாக இருக்கும். தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள், சுழல்பந்து வீச்சாளர்கள் அங்கு இருக்கிறார்கள்.

அதேபோல் இந்தியாவின் பந்துவீச்சுக்கும் எல்லோரும் காத்திருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணி 3-1 என வெற்றி பெறுமென கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.