100 ஆண்டுகளாக தக்கவைத்த முதலிடம்; சிங்கிளாக சுத்தும் சீனர்கள் - முந்திய இந்தியா!
மக்கள் தொகையில் முதலிடத்தை கொண்ட சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளியது.
மக்கள் தொகை
கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் மக்கள் தொகை 8.5 லட்சம் அளவுக்கு சரிந்து, 141.1 கோடியாக குறைந்தது. அதே சமயத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், னாவில் நடைபெறும் திருமணங்களின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளதாக உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக திருமண பதிவுகள் தொடர்ந்து சரிந்து வருவதாகவும்,
நெருக்கடியில் சீனா
கொரோனா கால ஊரடங்குகளினால், திருமணங்களின் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குழந்தைகள் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகளாகக் குறைந்துள்ளது.

இதே நிலை நீடித்தால், 2050ல் சீன மகக்ள் தொகை 131.3 கோடியாக குறைந்து, 2100ல் 80 கோடியாக வீழ்ச்சியடையும் என்று ஐ.நா ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலையை சரிசெய்ய சீனா 20 நகரங்களில் புதிய திட்டங்களை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.