இனி சென்னைக்கு வெள்ளம் வராது - அரசின் அசத்தல் திட்டம்
வானிலையை கட்டுப்படுத்தும் சோதனைகளில் அரசு இறங்கியுள்ளது.
பருவநிலை மாற்றம்
பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் வானிலை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மழை காலங்களில் அதிக வெயில் கொளுத்துவதும் , வெயில் காலங்களில் மழை கொட்டுவதும் நடந்து வருகிறது.
மழைக்காலமான டிசம்பர் மாதத்தில் பெய்யும் கன மழையில் சென்னை வெள்ளத்தில் தத்தளிப்பது வாடிக்கையாகி விட்டது.
கிளவுட் சீடிங்
அரசு இயற்கை பேரிடரை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்போது இந்திய அரசு கிளவுட் சீடிங்(Cloud Seeding) முறையை கையில் எடுத்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் தேவையான நேரத்தில் மழை பெய்ய வைக்கவும், மழையை நிறுத்தவும் முடியும்.
இது குறித்த ஆய்வுகள் தற்போது தொடங்கி விட்டது. ஏற்கனவே மகாராஷ்டிரா மற்றும் சில பகுதிகளில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் நம்மால் வானிலையை கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Mausam GPT
மேலும் துல்லியமான வானிலை முன்னறிவுப்புகளை வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 2 ஆண்டுகளில் 2000 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தோடு "Mausam GPT" என்ற வானிலை முன்னறிவிப்பு வழங்கும் செயலியையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதில் குரல் மற்றும் எழுத்து வடிவில் வானிலை முன்னறிவிப்புகளை பெறலாம்.
ஏற்கனவே சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் கிளவுட் சீடிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது.