இனி சென்னையில் parking பிரச்சனை இருக்காது - இந்த App இருந்தால் போதும்
சென்னையில் கார் பார்க்கிங் சிக்கலை தீர்க்க CUMTA புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
பார்க்கிங்
சென்னை போன்ற பெரு நகரங்களில் காரில் பயணிப்பவர்களுக்கு டிராபிக் ஒரு தலைவலி என்றால் காரை நிறுத்த பார்க்கிங் இடம் இல்லாமல் அவதிபடுவது மற்றொரு தலைவலி. விடுமுறை நாட்களில் ஷாப்பிங் செல்லும் இடங்களில் காரை நிறுத்த இடம் இல்லாமல் பலரும் தவிப்பதுண்டு.
நோ பார்க்கிங் பகுதிகளில் வாகனத்தை நிறுத்தினால் போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதிப்பார்கள். போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். இதனால் சொந்த கார் வைத்திருந்தாலும் வெளியே எடுத்து செல்ல யோசிக்க வேண்டிய நிலை உள்ளது.
செயலி
இந்த சிக்கலுக்கு தீர்வு காண சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA), புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.இதன்படி கார் வைத்திருப்பவர்கள் பார்க்கிங்க் செய்யும் இடத்தை முன் கூட்டியே புக் செய்து கொள்ளும் வகையில் புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது, "இந்த பணிகள் இன்னும் 2 மாதங்களில் நிறைவு பெற்றுவிடும். முதல் கட்டமாக அண்ணா நகரில் செயல்படுத்தப்படும். அதன்பிறகு முக்கிய பகுதிகளில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தாங்கள் தேர்வு செய்த நேரம் முடிவதற்கு 10 நிமிடம் முன்பாக அவர்களுக்கு அலார்ட் செய்யப்படும். அந்தந்த பகுதிக்கு ஏற்ப கட்டணங்கள் மாறுபாடும்.
தற்போது 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 1500 பார்க்கிங் பகுதிகள் வரை இருக்கும். பார்க்கிங் கொள்கைகள் வகுக்கப்பட்ட பின்னர் இதற்காக டெண்டர் விடப்படும். சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் டெண்டர் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்" என தெரிவித்துள்ளனர்.