கோயிலில் வைத்து பாலியல் வன்முறைக்குள்ளான பெண்: நாகப்பட்டினத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

india-girl-tamilnadu-boys
By Jon Jan 08, 2021 02:52 PM GMT
Report

நாகை வெளிப்பாளையம் காமராஜர் காலனியைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர் கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அந்த பெண் சகோதரியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர் பெண்ணை வழிமறித்து தாக்கி அப்பகுதியில் இருந்த கோயிலுக்கு அழைத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வீட்டிற்கும் சென்று அந்த இளைஞர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.