இந்தியாவிற்குள் நுழைந்த குரங்கம்மை - நடுங்கும் உலக நாடுகள்!

India Monkeypox
By Sumathi Sep 09, 2024 08:06 AM GMT
Report

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

குரங்கு அம்மை 

குரங்கு அம்மை தொற்று 116 நாடுகளில் பரவியுள்ளது. எனவே, இதனை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்தது.

monkeypox

தமிழ்நாட்டிலும் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமாணியன் தெரிவித்திருந்தார். அதன்படி, வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த 26,000க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சோதனை நடைபெற்றுள்ளது.

மக்களே கவனம்; தாண்டவமாடும் குரங்கம்மை - தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை!

மக்களே கவனம்; தாண்டவமாடும் குரங்கம்மை - தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை!


அறிகுறிகள்

இந்நிலையில், வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய ஒரு இளைஞருக்கு, தற்போது குரங்கு அம்மை தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில்,

இந்தியாவிற்குள் நுழைந்த குரங்கம்மை - நடுங்கும் உலக நாடுகள்! | India First Suspect Case Of Monkeypox

சந்தேகத்திற்கிடமான நோயாளி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் ஆகியவை குரங்கு அம்மையின் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.