இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் சந்திரா நாயுடு உயிரிழந்தார்
இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இந்தியாவின் முதல் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு (88), இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனான சி.கே நாயுடுவின் மகள் ஆவார். இவருக்கு சிறுவயது முதலிலிருந்தே கிரிக்கெட் மீது ஆதித ஆர்வம் இருந்தது.
அவருடைய ஆர்வம் அவரை உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயலாற்ற வைத்தது. அதைத் தொடர்ந்து கிரிக்கெட் வர்ணனையாளராக 1970களில் சந்திரா நாயுடு பணியை தொடங்கினார்.
சந்திரா நாயுடு ஆங்கில பேராசிரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பெண்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க பல முயற்சிகளை அவர் செய்துள்ளார். அவரது மறைவிற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil