முதல் இன்னிங்ஸ்சில் 436 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா..! 190 ரன்கள் லீட்.!

Ravindra Jadeja Joe Root England Cricket Team
By Karthick Jan 27, 2024 05:30 AM GMT
Report

3-ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 436 ரன்களை எடுத்து ஆல் அவுட்டாகியது.

முதல் டெஸ்ட்

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 119 ரன்களை எடுத்திருந்தது.

india-finishes-1st-innings-with-190-lead

2-ஆம் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணியில், 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்களை குவித்துள்ளது. ரவீந்திர ஜடேஜா 81 ரன்களிலும், அக்சர் படேல் 35 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

190 ரன் லீட்

3-ஆம் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு ஜோ ரூட் நெருக்கடிகையை கொடுத்தார். அவரது பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 87 ரன்னில் LBW முறையில் அவுட்டாக, பின்னர் அக்சர் படேல் 44 ரன்னில் ரேகன் அகமது பந்துவீச்சில் பெல்ட்டாகினார்.

ரொம்ப பாவம் - அடித்து நொறுக்கிய இந்திய வீரர்கள்- 100 ரன்களை வாரி வழங்கிய அறிமுக வீரர்..!!

ரொம்ப பாவம் - அடித்து நொறுக்கிய இந்திய வீரர்கள்- 100 ரன்களை வாரி வழங்கிய அறிமுக வீரர்..!!

பின்னர் வந்த பும்ரா ரன் எடுத்தும் இன்று வெளியேறினார். சிராஜ் ரன் எடுக்காமல் களத்தில் உள்ளார். இங்கிலாந்து அணி தரப்பில், ஜோ ரூட்(Joe Root) 4 விக்கெட்டும், டாம் ஹாட்டலி (Tom Hartley) மற்றும் ரேகன் அகமது (Rehan Ahmed) தலா 2 விக்கெட்டுகளும், ஜாக் லீச்(Jack Leach), 1 விக்கெட் கைப்பற்றினர்.

india-finishes-1st-innings-with-190-lead

190 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை துவங்கியுள்ளது.