ரொம்ப பாவம் - அடித்து நொறுக்கிய இந்திய வீரர்கள்- 100 ரன்களை வாரி வழங்கிய அறிமுக வீரர்..!!

Karthick
in கிரிக்கெட்Report this article
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா அணி 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் டெஸ்ட்
இரண்டாம் நாள் ஆட்டத்தை 119/1 என்ற கணக்கில் துவங்கிய இந்திய அணி இன்று மீண்டும் பேட்டிங்கை தொடர்ந்தது. இன்று இந்தியா அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்கள், கே.எல்.ராகுல் 86 ரன்கள் குவித்து அவுட்டாகினர்.
மறுமுனையில், ஆல் ரவுண்டர் ஜடேஜா பேட்டிங்கிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் நாள் ஆட்டநேர முடிவின் இறுதி வரைந்த அவுட்டாகாத அவர் 81 ரன்களை எடுக்க, அக்சர் படேல் 35 ரன்களை எடுத்து களத்தில் இருக்கின்றார்.
131 ரன்கள்....
இங்கிலாந்து அணி தரப்பில், டாம் ஹாட்டலி (Tom Hartley) மற்றும் ஜோ ரூட்(Joe Root) தலா 2 விக்கெட்டுகளும் ஜாக் லீச்(Jack Leach), ரேகன் அகமது (Rehan Ahmed) தலா 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.
இந்த போட்டியில், இங்கிலாந்து அணியின் அறிமுக பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி 25 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினாலும், மொத்தமாக 131 ரன்களை வாரி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.