பட்டினி அதிகரிக்கும் நாடாக இந்தியா - மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி!
உலகளாவிய பட்டினிக் குறியீட்டு எண் பட்டியலில் இந்தியா பின்தங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டினி
கன்செர்ன் வேர்ல்டுவைட் எனும் அயர்லாந்து தொண்டு நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃப் நிறுவனமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் உலகளாவிய பட்டினிக் குறியீட்டெண் அறிக்கையை வெளியிடுகின்றன.

பட்டினிக் குறியீட்டைப் பொறுத்தவரை ஒரு நாட்டின் இடத்தை, ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தைகளின் சவலைத்தன்மை, வளர்ச்சிக் குறைபாடு, குழந்தை இறப்பு விகிதம் ஆகிய நான்கு காரணிகள் தீர்மானிக்கின்றன. இந்தப் பட்டியலில் 9.9 புள்ளிகள் வரை பெறும் நாடுகள் ஒப்பீட்டளவில் நல்ல நிலைமையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்தியா
10 முதல் 19.9 வரையிலான புள்ளிகளைப் பெறும் நாடுகள் ஓரளவுக்குச் சராசரியான நிலையில் இருப்பவை. 20 முதல் 34.9 வரையிலான புள்ளிகளைப் பெறுபவை மோசமான நிலையில் இருக்கும் தேசங்கள். 35 முதல் 49.9 வரை பெற்றிருப்பவை ஆபத்தான நிலையில் இருக்கும் நாடுகள்.

50-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெறும் தேசங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பவை. கடந்த ஆண்டு இந்தியா 27.5 புள்ளிகளைப் பெற்றிருந்தது. இந்த ஆண்டு இந்தியா 29.1 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் 5 புள்ளிகளுக்கும் குறைவாகப் பெற்று முன்னணி இடங்களில் இருக்கின்றன.
மோசமான நிலை
கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்துவரும் இலங்கை இப்பட்டியலில் 64-வது இடத்தைப் பெற்றிருக்கிறது. நேபாளம்(81), வங்கதேசம்(84), பாகிஸ்தான்(99) ஆகிய இடங்களைப் பெற்றிருக்கின்றன. தாலிபான்கள் ஆட்சியில் கடும் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் கூட 109-வது இடத்தில்தான் இருக்கிறது.
தொடர்ந்து, இதுகுறித்து கடந்த 8 ஆண்டுகளில் மோடி ஆட்சிக்காலத்தில் இந்தியா மிகவும் மோசமான நிலையை அடைந்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.