தடுமாறும் இந்தியா: வெளியாகும் பேட்ஸ்மேன்கள்

rohit virat pant
By Jon Feb 26, 2021 06:57 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடிவருகிறது. பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தது. தொடர்ந்து இந்திய அணி நேற்று முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ரஹானே, ரோகித், பண்ட், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் என அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் அவுட்டாகினர்.

இங்கிலாந்து அணிக்காக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அந்த அணியின் கேப்டன் ரூட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.