இந்தியாவுடன் மோதும் இங்கிலாந்து அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. முதல் இரண்டு டெஸ்டுகள் சென்னையில், பிப்ரவரி 5- 9 மற்றும் பிப்ரவரி 13- 17 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (கேப்டன்), ஆர்ச்சர், மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஸாக் கிராவ்லி, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜேக் லீச், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.
மாற்று வீரர்கள்: ஜேம்ஸ் பிரேசி, மாசன் கிரேன், சகிப் முகமது, மேத்யூ பார்கின்சன், ஒல்லி ராபின்சன், அமர் விர்டி.