அசத்தலாக சதம் விளாசி ஆஸ்திரேலியாவை அலறவிட்ட இந்தியா கேப்டன்

india cricket rahane
By Jon Dec 28, 2020 01:06 PM GMT
Report

தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் சதம் விளாசி ஆஸ்திரேலியா அணியை அலறவிட்ட இந்தியா அணியின் கேப்டன் ரஹானே.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 36 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்றைய 2வது நாள் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில் 45 ரன்களில் கேட்ச் ஆனார்.

அவரைத்தொடர்ந்து பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் புஜாரா 17 ரன்களில் டிம் பெய்னிடம் கேட்ச் ஆனார். அடுத்ததாக கேப்டன் ரஹானேவுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியில் விஹார் 21 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார் ஜடேஜா. இந்த ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. இதில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே 195 பந்துகளில் சதம் விளாசினார். இது அவரது டெஸ்ட் அரங்கில் 12வது சதமாக பதிவானது.

பின்னர் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது இந்திய அணி 91.3 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.

இதன்மூலம் இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியை விட 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் சார்பில் ரகானே 104 ரன்களும், ஜடேஜா 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.