இந்திய டெஸ்ட் அணியில் நடராஜன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் டி.நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.
இந்நிலையில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற, 2வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று சமன் செய்துள்ளது.
மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன. இதற்கான இந்திய அணியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக டி.நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாக்ஸிங் டே டெஸ்டுக்கு முன்பு ஷமிக்குப் பதிலாக ஷர்துல் தாக்குர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்,
காயமடைந்துள்ள ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.