தோனி என்ன சாதித்தார்? முன்னாள் இந்திய வீரர் பகிரங்க குற்றச்சாட்டு

india-cricket-dhonhi
By Jon Jan 03, 2021 09:27 AM GMT
Report

ஐசிசி சமீபத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்கள், சிறந்த டி20, டெஸ்ட், ஒருநாள் அணிகளை வெளியிட்டது. இதில் கடந்த 10 ஆண்டுகளில சிறந்த டி20, ஒருநாள் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்திய அணயின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, ஐசிசி டி20 அணியில் தோனி சேர்க்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் டி20 போட்டிகளில் மகேந்திர சிங் தோனி என்ன செய்தார், ஏதாவது கோப்பையை வென்று கொடுத்தாரா . எதற்காக டி20 அணியில் அவர் பெயர் இடம் பெற்றுள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா அவரின் யூடியூப் சேனலில் பேசுகையில், ' கடந்த10 ஆண்டுகளில் தோனி தலைமையில் இந்திய அணி ஏதாவது உலகக் கோப்பையை வென்றுள்ளதா. கடந்த 10 ஆண்டுகளில் தோனி டி20 போட்டிகளில் மெச்சும் அளவுக்கு சிறப்பாக விளையாடியுள்ளாரா.

ஏதும் இல்லை. ஆனால், ஐசிசி டி20 அணியில் தோனி கேப்டனாகச் சேர்க்கப்பட்டது கண்டு எனக்கு வியப்பாக இருந்தது. டி20 போட்டிகளில் தோனியின் பேட்டிங்கைப் பார்த்தால், இதுவரை 98 போட்டிகளில் விளையாடிய தோனி 1,617 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 2 அரைசதங்கள் மட்டுமே அடங்கும்.

தோனியின் டி20 ஸ்ட்ரைக் ரேட் 126.13 ஆகும். ஐசிசி அறிவித்த டி20, டெஸ்ட், மற்றும் ஒருநாள் அணியில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கூட இடம் பெறாதது குறித்து முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் சாடியிருந்தார்.

அவர் கூறுகையில் " ஐசிசி அறிவித்தது உண்மையான டி20 அணி அல்ல, இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கான அணி" என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.