Password என்ன..Password தான் - இதுதான் இந்தியர்களின் ஸ்மார்ட் செயலாம் - ஆய்வில் அதிர்ச்சி

India
By Sumathi Nov 17, 2022 07:08 AM GMT
Report

 இந்தியர்கள் மிகவும் பலவீனமான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பாஸ்வேர்டு

நோர்டு பாஸ் என்ற நிறுவனம் உலகில் உள்ள பெரும்பாலான மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாஸ்வேர்டுகளை எளிதாக திருட முடியும் என அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. பாஸ்வேர்டு மேனேஜிங் நிறுவனமான இது உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் ஒரே மாதிரியான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துகின்றனர் எனக் கூறுகிறது.

Password என்ன..Password தான் - இதுதான் இந்தியர்களின் ஸ்மார்ட் செயலாம் - ஆய்வில் அதிர்ச்சி | India Continues To Use Unsafe Passwords Nordpass

அதன்படி சுமார் 34 லட்சம் இந்தியர்கள் "password" என்ற வார்த்தையை தங்களது பாஸ்வேர்டாக வைத்திருக்கின்றனர். சுமார் ஒன்றரை லட்சம் பேர் '123456' என்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் '12345678' என பாஸ்வேர்டாக வைத்திருக்கின்றனர்.

ஆய்வு தகவல்

இதே போல 200 எளிமையான பாஸ்வேர்டுகள் இந்த பட்டியலில் இருக்கின்றன. மேலும், 'qwerty’, பிறந்தநாள், வாகனங்களின் பதிவு எண்கள், செல்லப் பிராணிகளின் பெயர்கள், தந்தை மகன் பெயர்கள், பள்ளிக்கூடங்களின் பெயர்கள் உள்ளிட்டவை பாஸ்வேர்டுகளாக பயன்படுத்தப்படுகின்றனவாம்..

Password என்ன..Password தான் - இதுதான் இந்தியர்களின் ஸ்மார்ட் செயலாம் - ஆய்வில் அதிர்ச்சி | India Continues To Use Unsafe Passwords Nordpass

மேலும், அதிகமானோர் தங்கள் பெயர்களையே பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் பலரது தனிப்பட்ட தகவல்களை திருட முடியும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.