போட்டிக்கு துவங்கும் முன்னே இந்திய அணிக்கு பின்னடைவு - அவசரமாக நாடு திரும்பிய முக்கிய நபர்

Dubai Indian Cricket Team South Africa ICC Champions Trophy
By Karthikraja Feb 19, 2025 01:00 PM GMT
Report

 இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராஃபி

2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் இன்று(19.02.2025) தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இன்று பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியில், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. 

சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பை

நாளை துபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகிறது. ஏற்கனவே காயம் காரணமாக பும்ரா விலகியது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. 

இந்திய கொடியை மைதானத்தில் ஏற்றாதது ஏன்? - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்

இந்திய கொடியை மைதானத்தில் ஏற்றாதது ஏன்? - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்

மோர்னே மோர்கல்

இந்நிலையில் நேற்று முன்தினம் வரை இந்தியா பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல்(morne morkel) நேற்று அவசரமாக சொந்த நாடான தென்னாப்பிரிக்காவிற்கு திரும்பியுள்ளார்.

மோர்கலின் தந்தை ஆல்பர்ட் உயிரிழந்துள்ளதால் அவர் தென்னாப்பிரிக்காவிற்கு சென்றுள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை இந்தியாவிற்கான போட்டி துவங்க உள்ள நிலையில் மோர்கல் எப்போது மீண்டும் துபாய் திரும்புவார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

இந்தியா வங்கதேசத்திற்கு எதிராக இதுவரை 41 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், 32 போட்டிகளில் இந்தியாவும், 8 போட்டிகளில் வங்கதேசமும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் வங்கதேசம் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த சூழலில் பந்து வீச்சு பயிற்சியாளர் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.