உலகிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் - பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்
உலகிலேயே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை நாளை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி மெட்ரோவின் மஜந்தா மார்க்கத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் மூலம் புதியதொரு பயண அனுபவத்தை மக்கள் பெறலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. தற்போது மஜந்தா மார்க்கத்தில் இந்த சேவை துவங்கப்பட உள்ள நிலையில், 2021 மத்தியில் மெட்ரோவின் பிங்க் மார்க்கத்திலும் ரயில் சேவை இயக்கப்படும்.
தேசியப் பொதுப் போக்குவரத்து அட்டையின் மூலம் RuPay-Debit Card வைத்திருப்பவர்கள் இந்த மார்க்கத்தில் புதிய போக்குவரத்து அட்டையைப் பயன்படுத்திப் பயணம் செய்து கொள்ளலாம்.
வரும் 2022- ஆம் ஆண்டுக்குள் டெல்லி மெட்ரோ ரயில்கள் அனைத்திலும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil