பட்ஜெட் 2024 தமிழக தலைவர்கள் கூறுவது என்ன? ஒரு தொகுப்பு
மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்
2024-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பீகார் - ஆந்திர மாநிலங்களுக்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது தெரிவதாகவே எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகிறார்கள்.
பட்ஜெட் குறித்து தமிழக தலைவர்கள் என்னென்ன கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் என்பது தற்போது பார்க்கலாம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - கூட்டணி கட்சிகளுக்கே மட்டுமே திருப்திப்படும் வகையில் திட்டங்கள் அறிவிப்பு, ஆனால் அவற்றை நிறைவேற்றுவார்களா என்பது தெரியவில்லை. தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி - தமிழ்நாட்டுக்கு எந்தவித புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திபடுத்தும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை - மிக சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன். நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் - பட்ஜெட்டில் வரி குறைப்பு, வேலைவாய்ப்புத் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை, ஆனால் தமிழகத்திற்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
சசிகலா - பெட்ரோல் டீசல் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறாததால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது சாத்தியப்படுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது
மதிமுக வைகோ - பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு, தமிழ்நாடு முதல்வரின் கோரிக்கை புறக்கணிப்பு