இந்தியா ஜெயிச்சாலும் கஷ்டம் - 3வது இடத்தில் இருந்தும் சரிவு?
இந்திய அணி மூன்றாவது இடத்திலேயே நீடிப்பது, ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு, இந்தியாவின் வெற்றி சதவீதம் 55.56-லிருந்து 61.90 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அணிக்கு முன்பாக ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
3வது இடம்
இதில் லாகூரில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், ஏதேனும் ஒரு அணி வெற்றி பெற்றால், அவர்களின் வெற்றி சதவீதம் இந்தியாவை விட அதிகமாகி, இந்தியாவை நான்காவது இடத்திற்குத் தள்ளிவிடும்.
புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.
எனவே இந்திய அணி இனி வரும் ஒவ்வொரு தொடரையும் வெல்வது மிகவும் அவசியம். குறிப்பாக, சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளில் 100% வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்.