முக்கிய வீரர்கள் விடுவிப்பு? கப் அடிச்சே ஆகணும் -சிஎஸ்கே எடுத்த முடிவு!
சிஎஸ்கே முக்கிய வீரர்கள் சிலரை அணியில் இருந்து விடுவிக்கவுள்ளது.
சிஎஸ்கே
2026ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதத்தில் நடக்கவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக 2023ல் 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
ஆனால் கடந்த 2 சீசன்களாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 2026 ஐபிஎல் சீசனுக்கு தக்கவைக்கப்படும் வீரர்கள், விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் நவம்பர் 15க்குள் பிசிசிஐயிடம் அளிக்க வேண்டும்.
வீரர்கள் விடுவிப்பு
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 5 ஸ்டார் வீரர்களை விடுவிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, விஜய் சங்கர், தீபக் ஹூடா, சாம் கரண், ராகுல் திருப்பாதி, டெவான் கான்வே உள்ளிட்ட வீரர்கள் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.