ஆஸ்திரேலியா அணியை அசத்தலான வெற்றியின் மூலம் பழி தீர்த்தது இந்தியா

india cricket test
By Jon Dec 29, 2020 05:37 PM GMT
Report

2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்தது இந்தியா.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 195 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதைதொடர்ந்து இன்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் கேமரூன் கிரீன் 17 ரன்னுடனும், கம்மின்ஸ் 15 ரன்னுடனும் களத்தில் இறங்கினர். இந்திய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சில் இந்த ஜோடியில் பேட் கம்மின்ஸ் 22 ரன்களும், சிறப்பாக ஆடிய கேமரூன் கீரின் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய நாதன் லைன் 3 ரன்னும், ஹேசில் வுட் 10 ரன்களும் எடுத்து வெளியேறினர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 103.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும், ஆர்.அஸ்வின், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட 69 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 70 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறக்கினர்.

இதில் மயங்க் அகர்வால் 5 ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய புஜாராவும் 3 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக சுப்மன் கில்லுடன், கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.

தொடர்ந்து கலக்கிய இந்த ஜோடி, அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றது. முடிவில் சுப்மன் கில் 35 ரன்களும், ரஹானே 27 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் இந்திய அணி 15.5 ஒவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 70 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இதன்படி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளது.