இந்தியா கூட்டணி 295 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறும் - மல்லிகார்ஜுன கார்கே

Indian National Congress Rahul Gandhi Arvind Kejriwal Lok Sabha Election 2024
By Karthikraja Jun 01, 2024 01:15 PM GMT
Report

 இந்தியா கூட்டணி கட்சியினரின் ஆலோசனை கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்

2024 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. இன்றுடன் (01.06.2024) வாக்குப்பதிவு முடிவடைகிறது. இதன் பின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் கூடியது.

இந்தியா கூட்டணி 295 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறும் - மல்லிகார்ஜுன கார்கே | India Alliance Win 295 Above Seats Says Kharge

இதில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இராச்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரெஸ் தலைவர் சரத் பவார், கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் க்கு பதிலாக கழக பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார்.

இந்தியா கூட்டணியில் பிரதமர் யார் என்பது 24 மணி நேரத்தில் தெரியும் - ப சிதம்பரம் உறுதி

இந்தியா கூட்டணியில் பிரதமர் யார் என்பது 24 மணி நேரத்தில் தெரியும் - ப சிதம்பரம் உறுதி

செய்தியாளர் சந்திப்பு 

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் அவர் பேசியதாவது, இந்தியா கூட்டணி 295 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறும், கருத்துக்கணிப்பு குறித்த விவாதங்களில் இந்தியா கூட்டணியினர் பங்கேற்பார்கள்.