ஜூன் 4'இல் ரிசல்ட் - ஜூன் 1'இல் அவசரமாக கூடும் இந்தியா கூட்டணி - பரபரப்பு பின்னணி!!
வரும் ஜூன் 4-ஆம் தேதி நாட்டின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.
மக்களவை தேர்தல்
நாட்டின் அடுத்த அரசை தீர்மானிக்கும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ஆம் தெத்து துவங்கி நடைபெற்று வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி மத்தியில் தான் பெரும் போட்டி.
10 நாட் ஆட்சியை நிறைவு செய்யும் பாஜக மீண்டும் மோடி என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தலில் விட்டால் நாட்டை பாஜகவிடம் கொடுத்து விட வேண்டியது தான் எதிர்ப்பு வாதங்களை வைத்து தேர்தலை சந்தித்துள்ளது இந்தியா கூட்டணி. இன்னும் ஒரு கட்ட தேர்தலே அதாவது ஜூன் 1-ஆம் தேதி மட்டுமே தேர்தல் பாக்கி உள்ளது.
கூட்டம்
பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இன்னும் இந்தியா கூட்டணி தரப்பில் பிரதமர் வேட்பாளர் நியமிக்கப்படவில்லை.
அதே நேரத்தில், ஆண்டுக்கு ஒரு பிரதமரை வைப்பார்கள் என்ற விமர்சனத்தை பாஜக இந்தியா கூட்டணி மீது வைத்து வருகின்றது.
இந்த நிலையில், தான் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1-ஆம் தேதி இந்தியா கூட்டணி அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.