5 மாநில தேர்தல் எதிரொலி..!! திடீரென டெல்லி செல்லும் முதலமைச்சர் முக ஸ்டாலின்..?
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலில் சற்று பின்னடைவை பெற்றுள்ளது.
இந்தியா கூட்டணி
மத்தியில் வலுவாக இருக்கும் பாஜகவை எதிர்த்து இரண்டு முறை தோல்வியை சந்தித்த காங்கிரஸ் தற்போது புது கூட்டணி யுக்தியை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தில் வலுவாக இருக்கும் பல கட்சிகளை ஒன்றிணைத்து புது கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முன்னின்று உருவாகிவரும் இக்கூட்டணியில் காங்கிரஸ், திமுக போன்ற இணக்கமான கட்சிகள் மட்டுமின்றி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை ஆணித்தரமாக எதிர்த்து வந்த கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மீ, சமாஜ்வாதி கட்சி, சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
டெல்லி செல்லும் முதல்வர்
இந்த கூட்டணியின் கூட்டங்கள் பீகார், பெங்களூரு, மும்பை போன்ற இடங்களில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது அடுத்து கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில், வரும் 6-ஆம் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என்றும் அதற்காக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் முதல்வர் டெல்லி செல்லவுள்ளார் என்ற தகவல் பரவி வருகின்றது.