ஜம்மு காஷ்மீர் வாக்கு எண்ணிக்கை; ஆட்சியை பிடிக்குமா இந்தியா கூட்டணி?
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது பாஜக ஆதரவுடன் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சியமைத்தது.
2018 ஆம் ஆண்டு பாஜக ஆதரவை வாபஸ் வாங்கிய நிலையில் ஆட்சி கவிழ்ந்து குடியரசு தலைவர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது. மாநிலமாக இருந்த காஷ்மீர், 2019 ஆம் ஆண்டு சிறப்பு சட்டம் நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
முதல் தேர்தல்
அதன் பின் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
இதில் காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் தனித்து களமிறங்கியுள்ளன.
இந்தியா கூட்டணி
வாக்கு எண்ணிக்கையில் 12:10 மணி நேர நிலவரப்படி, இந்தியா கூட்டணி 50 இடங்களிலும் பாஜக 24 மக்கள் ஜனநாயக கட்சி 4 இடங்களிலும், மற்றவை 12 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
இந்த தேர்தலில் மெஹபூபா போட்டியிடாத நிலையில், அவரது மகள் இல்திஜா முஃப்தி முதல்முறையாக போட்டியிட்டார். ஆனால் அவரும் பின்னடைவை சந்தித்துள்ளார். மக்கள் முடிவை ஏற்பதாக இல்திஜா முஃப்தி அறிவித்துள்ளார்.
I accept the verdict of the people. The love & affection I received from everyone in Bijbehara will always stay with me. Gratitude to my PDP workers who worked so hard throughout this campaign ?
— Iltija Mufti (@IltijaMufti_) October 8, 2024
இந்தியா கூட்டணி முன்னணியில் உள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.