ஹரியானா வாக்கு எண்னிக்கை; வினேஷ் போஹத் பின்னடைவு - ஹாட்ரிக் அடிக்குமா பாஜக?
ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஹரியானா வாக்கு எண்னிக்கை
ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் காலை 11:45 நிலவரப்படி பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 36, மற்றவை 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.
மீண்டும் பாஜக
ஜுலானா தொகுதியில் முன்னிலை வகித்து வந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் , மற்றும் கரி சம்ப்லா கிலோய் தொகுதியில் முன்னிலை வகித்த காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹுடா தற்போது பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
ஆட்சியமைக்க தேவையான 46 இடங்களை விட அதிக தொகுதியில் முன்னிலையில் உள்ளதால் மூலம் ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக ஹாட்ரிக் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.