காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா - தேர்தலில் போட்டியா?
வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளனர்.
ஹரியானா தேர்தல்
ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்திருந்தனர். இதனையடுத்து காங்கிரஸில் இருவரும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
வினேஷ் போகத்
இதனையடுத்து இன்று தான் வகித்து வந்த ரயில்வே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து 'ரயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாது' என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ள காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இருவரது பெயரும் இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.