ஆட்சி அமைக்க முடியுமா இந்தியா கூட்டணி? என்னென்ன வாய்ப்புகள் - முக்கிய தகவல்!
இந்தியா கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியுமா என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியா கூட்டணி
543 மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 296 இடங்களில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளில் எந்தக் கட்சியும் வெற்றி பெறாததால் கூட்டணி ஆட்சி அமைகிறது. அதன்படி, 2014, 2019ம் ஆண்டை தொடர்ந்து 2024லும் பாஜக மூன்றாவது முறையாக கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
ஆட்சி அமைக்க முடியுமா?
இந்தியா கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு தனிப்பெருன்மை கிடைக்காத நிலையில், இந்தியா கூட்டணிக்கு சில வாய்ப்புகள் உள்ளது. தெலுங்குதேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஓய்எஸ்ஆர் காங். சேர்த்து மொத்தம் 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
32 இடங்களை வைத்துள்ள 3 கட்சிகளையும் இந்தியா கூட்டணியில் இணைக்க காங்கிரஸ் முயற்சி செய்யலாம். NDA கூட்டணியில் உள்ள மேலும் பல கட்சிகளையும் இணைத்தால் மட்டுமே இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பாஜகவுக்கு கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்தால் மோடி மீண்டும் பிரதமராவார். இதற்கிடையில், நவீன் பட்நாயக், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆகிய கட்சிகளை இந்தியா கூட்டணி சேர்த்து கொள்ள முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.