உஷார்! காய்ச்சல் உள்ளிட்ட 48 மருந்துகள் தரமற்றவை - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

India
By Sumathi Apr 25, 2023 09:14 AM GMT
Report

காய்ச்சல், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கான 48 மருந்துகள் தரமற்றவை என தரக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

தரமற்ற மருந்து

இந்தியாவில் விற்பனை செய்யும் மருந்து மற்றும் மாத்திரைகள் அனைத்தும் மத்திய அல்லது மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்த பின் தான் விற்பனை செய்யப்படும். அந்த ஆய்வில் போலி அல்லது தரமற்ற மருந்துகளை கண்டறிந்தால் அதனை தயாரித்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

உஷார்! காய்ச்சல் உள்ளிட்ட 48 மருந்துகள் தரமற்றவை - ஆய்வில் அதிர்ச்சி தகவல் | India 48 Medicines Are Substandard

கடந்த மாதத்தில் 1,497 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அதில் காய்ச்சல், கால்சியம், இரும்புச் சத்து, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 48 மருந்துகள் தரமற்றவை என கண்டறிந்தனர்.

அதிர்ச்சி தகவல்

மேலும், இதில் அதிகமான தரமற்ற மருந்துகளை தயாரித்தது இமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தான் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உஷார்! காய்ச்சல் உள்ளிட்ட 48 மருந்துகள் தரமற்றவை - ஆய்வில் அதிர்ச்சி தகவல் | India 48 Medicines Are Substandard

இந்த போலி மருந்துகள் குறித்த விவரங்களை, மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.