காய்ச்சல்,சளி பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 59 மருந்துகள் தரமற்றவை - வெளியான திடுக்கிடும் தகவல்
காய்ச்சல்,சளி பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 59 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
தரமற்ற மருந்துகள்
இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய,மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.
ஆய்வின் போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 1,251 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் காய்ச்சல், சளி,கால்சியம், இரும்புச்சத்து, ஜீரண மண்டல பாதிப்பு பயன்படுத்தப்படும் 59 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

நிறுவனங்கள் மீது நடவடிக்கை
இதில் பெரும்பாலும் இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
தரமற்ற மருந்துகள் குறித்த விவரத்தை மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக தரமற்ற மருந்துகளை தயாரித்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.