பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் இருந்து பின்வாங்கும் இந்தியா கூட்டணி?
இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதில் இருந்து பின்வாங்குவதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியா கூட்டணி
எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி கூட்டணி ஆட்சி அமைக்கும் பெருபான்மையை பெறவில்லை. 543 இடங்களில் அக்கட்சி 232 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்க பெருபான்மை 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜகவின் கூட்டணி வலுவாக உள்ளது.
அக்கூட்டணியே ஆட்சியை அமைக்கும் என்றாலும், கடந்த முறை போல இல்லாமல், இம்முறை வலுவான எதிர்க்கட்சி மத்தியில் அமையவுள்ளது.
கிட்டத்தட்ட ஆட்சி அமைக்கும் சூழலில் இழந்துள்ள இந்தியா கூட்டணி, நேற்று நடத்திய கூட்டத்தில் ஆட்சி அமைப்பதை குறித்து பெரிதாக கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.
பின்வாங்கும் இந்தியா
வலுவான எதிர்கட்சியாக அமர்ந்து ஆளும் கூட்டணிக்கு எதிராக ஒன்றிணைந்த குரலாக மக்களவையில் எழுப்பவுள்ளதாக முடிவெடுத்துள்ளதாம்.
இதே நிலையில், டெல்லி கூட்டத்தை முடித்து கொண்டு சென்னை திரும்ப விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆந்திர முதல்வராக பதவியேற்க இருக்கும் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.