சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு... 9000 போலீசார் குவிப்பு - என்ன காரணம்?

M K Stalin Independence Day Tamil Nadu Police
By Vidhya Senthil Aug 12, 2024 06:41 AM GMT
Report

 சுதந்திர தினவிழாவை ஒட்டி சென்னை மாநகரில் 9000 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 சுதந்திர தினவிழா

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண்,இ.கா.ப. அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார்.

 சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு... 9000 போலீசார் குவிப்பு - என்ன காரணம்? | Independence Day Cleb 9000 Police Protection

அதன்பேரில், சுதந்திரன தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்டு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும்,சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின்உத்தரவின்பேரில், 9,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

76வது சுதந்திர தினம்: இந்தியா விலை மதிப்பில்லா திறமையை கொண்டுள்ளது - பிரதமர் மோடி

76வது சுதந்திர தினம்: இந்தியா விலை மதிப்பில்லா திறமையை கொண்டுள்ளது - பிரதமர் மோடி

காவல் அதிகாரிகள் 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், இரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய இடங்களில் கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளது.

சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு... 9000 போலீசார் குவிப்பு - என்ன காரணம்? | Independence Day Cleb 9000 Police Protection

இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும்ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் தீவிர வாகனத் தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.