76-வது சுதந்திர தினவிழா : சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் பறக்க விடப்பட்ட தேசியக்கொடி
By Irumporai
இந்தியா சுதந்திரம் பெற்றும் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர தினம்
இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பெருமானிடம் வெள்ளி தாம்பாலத்தில் தேசியக் கொடி வைத்து படைக்கப்பட்டது.
நடராஜர் கோவிலில் தேசியக் கொடி
கோவில் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தலைமையில், பொதுதீட்சிதர்கள் மேளதாளத்துடன் கோவில் பிரகாரத்தில் ஊர்வலமாக வலம் வந்து, பிரதான வாயிலான கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர், கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.