இந்திய அணி தேர்வு - ஸ்ரேயாஸ், சர்பராஸ் கான், முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா?
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்படவுள்ளது.
டெஸ்ட் தொடர்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது.
சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் முதல்முறையாக விளையாடவுள்ளது. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி விளையாடி வருகிறது. அந்த அணிக்கு கூட ஸ்ரேயாஸ் ஐயர் தான் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
வாய்ப்பு கிடைக்குமா?
இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இந்நிலையில், ரிஷப் பண்ட் காயம் காரணமாக விளையாட முடியாத சூழலில்,
அதிரடியாக விளையாடக் கூடிய ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு தேவையாக உள்ளார். அந்த இடத்தை சர்ஃபராஸ் கானை வைத்து நிரப்ப அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் முகமது ஷமி துலீப் டிராபியில் கூட சொதப்பினார்.
இதனால் முகமது ஷமிக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.