IND vs SA T20: சொந்த மண்ணில் வரலாறு படைக்குமா இந்தியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Cricket Indian Cricket Team T20 World Cup 2022 South Africa National Cricket Team
By Sumathi Sep 28, 2022 06:02 AM GMT
Report

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

IND vs SA

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களும் நிகழ்ந்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா மற்றும் புவனேஸ்வர் குமாருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில்

IND vs SA T20: சொந்த மண்ணில் வரலாறு படைக்குமா இந்தியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! | Ind Vs Sa T20 2022

காயம் காரணமாக விலகியுள்ள தீபக் ஹூடா மற்றும் கொரோனாவில் இருந்து குணமடையாததால் முகமது சமியும் இத்தொடரில் இருந்து விலகி உள்ளனர். இவர்களுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர், ஷபாஸ் அகமது உள்ளிட்டோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 வரலாறு படைக்குமா?

இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20 தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரராக கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். இவர் தற்போது வரை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 362 ரன்கள் குவித்துள்ளார்.

IND vs SA T20: சொந்த மண்ணில் வரலாறு படைக்குமா இந்தியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! | Ind Vs Sa T20 2022

அதேபோல் பந்துவீச்சை பொறுத்தவரை புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 14 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் தற்போது வரை 22,டி20 போட்டிகளில் விளையாடி உள்ளன.

அவற்றில் இந்தியா 11 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றதில்லை என்பதால் இந்த முறை அதனை உடைத்து வரலாற்றை மாற்றி அமைக்கும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.