டி20 கிரிக்கெட் தொடர் - இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பெயர் அறிவிப்பு

Cricket Australia Cricket Team
By Nandhini Sep 14, 2022 11:00 AM GMT
Report

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. வரும் 20ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 ஓவர் போட்டி மொகாலியில் தொடங்க இருக்கிறது. இதனையடுத்து, 2-வது போட்டி நாக்பூரிலும், 3-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது.

இந்தத் தொடருக்கான இந்திய அணி கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

australia-cricket-team

ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விபரம்:

ஆரோன் பின்ச் (கே),

கேமரூன் கிரீன்,

பாட் கம்மின்ஸ்,

ஆஷ்டன் அகர்,

டிம் டேவிட்,

கேன் ரிச்சர்ட்சன்,

நாதன் எல்லிஸ்,

டேனியல் சாம்ஸ்,

கிளென் மேக்ஸ்வெல்,

ஸ்டீவ் ஸ்மித்,

மேத்யூ வேட்,

ஆடம் ஜம்பா.

ஜோஷ் ஹேசில்வுட்,

ஜோஷ் இங்கிலிஸ்,

இத்தொடரில் மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு காயம் காரணமாக ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. நாதன் எல்லிஸ்,டேனியல் சாம்ஸ், சீன் அப்போட்டுக்கு ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.