எங்களோட தோல்விக்கு இதுதான் காரணம் : ரிஷப் பண்ட் வேதனை

British Broadcasting Corporation Rishabh Pant India South Africa
1 மாதம் முன்

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி கட்டாக்கில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

தடுமாறிய இந்திய அணி:

 முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஸ்ரேயஸ் ஐயர் 40 ரன்களும், இஷான் கிஷன் 34 ரன்களும் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 30 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்ததால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.

எங்களோட தோல்விக்கு இதுதான் காரணம் :  ரிஷப் பண்ட் வேதனை | Ind Vs Sa2nd T20i Says Rishabh Pant

வெற்றியினை இலகுவாக தட்டிய தென் ஆப்பிரிக்கா : 

இதன்பின் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு ஹென்ரிக்ஸ் (4), ப்ரெடோரியஸ் (4) மற்றும் வாண்டர் டூசன் (1) போன்ற வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தாலும், தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான டெம்பா பவுமா 35 ரன்களும், இந்திய அணியின் பந்தை துவம்சம் செய்ய 18.2 ஓவரிலேயே தென் ஆப்ரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எங்களோட தோல்விக்கு இதுதான் காரணம் :  ரிஷப் பண்ட் வேதனை | Ind Vs Sa2nd T20i Says Rishabh Pant

இந்தநிலையில், தென் ஆப்ரிக்கா அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ரிஷப் பண்ட், 10 – 15 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார். இது குறித்து ரிஷப் பண்ட் கூறுகையில் : நாங்கள் 10 – 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். புவனேஷ்வர் குமார் உள்பட அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் முதல் 8 ஓவர்களை சிறப்பாக வீசினர்.

விக்கெட்டு எடுக்க முடியவில்லை

ஆனால் அதன்பிறகு எதுவும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை, நாங்கள் திட்டமிட்டிருந்த படியும் எதுவும் நடக்கவில்லை. போட்டியின் இரண்டாவது பாதியில் எங்களால் விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை. டெம்பா பவுமாவும், ஹென்ரிச் கிளாசனும் மிக சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

நாங்கள் பந்துவீச்சில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். அடுத்த போட்டியில் தவறுகளை சரி செய்து கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. எஞ்சியுள்ள மூன்று போட்டியிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் உள்ளதால், வெற்றிக்காக கடுமையாக முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.  

இந்திய அணி கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க : பாகிஸ்தான் அணியை எச்சரிக்கும் முன்னாள் வீரர்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.