அக்சர் பட்டேல் மட்டும் அதை செய்யாமல் இருந்திருந்தால்.. கோலி செஞ்சுரி அடித்திருக்கவே முடியாது!
அக்சர் பட்டேல் செய்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
IND vs PAK
இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது.
அடுத்து இந்திய அணி விளையாடுகையில், 42வது ஓவருக்கு முன்னதாக விராட் கோலியின் சதத்திற்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. விராட் கோலி ரன் ஓடாமல் நின்று அதன் பின் சில பவுண்டரிகளை அடித்து தனது சதத்தை நிறைவு செய்திருக்கலாம்.
அக்சர் பட்டேல் செயல்
ஆனால், விராட் கோலி இந்த முறை சதம் அடிக்க வேண்டும் என்பதை நோக்கி விளையாடவில்லை. அதனால் இரண்டாவது பந்திலும் ஒரு ரன் ஓடினார். பின் பிறகு மூன்றாவது பந்தை ஷஹீன் ஷா அப்ரிடி வைடாக வீசினார். அப்போது அக்சர் பட்டேல் ஒரு ரன் மட்டும் ஓடினார்.
அப்போது இரண்டாவது ரன் ஓடுவதற்கான அவகாசம் இருந்தது. விராட் கோலி இரண்டாவது ரன் ஓடி வருமாறு அக்சர் பட்டேலைப் பார்த்து அழைத்தார். ஆனால், அக்சர் பட்டேல் ஒரு சிறிய புன்னகையை மட்டும் செய்துவிட்டு ஓடி வர மறுத்துவிட்டார்.
விராட் கோலி அடுத்த மூன்று பந்துகளை சந்தித்தால் அவர் சதம் அடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது' என்பதால் அக்சர் பட்டேல் இவ்வாறு நடந்து கொண்டார். அவரது இந்தச் செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.