அவசரமாக ஆடுகளத்தை விட்டு வெளியேறிய ஷமி - என்ன நடந்தது?
ஷமி மூன்று ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
IND vs PAK
2025 சாம்பியன்ஸ் டிராபி, இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே ஐந்து வைடுகளை வீசி இருந்தார்.
அடுத்த ஓவர்களில் சமாளித்த ஷமி தான் வீசிய ஆட்டத்தின் 3வது ஓவரில் 4 ரன்களும், 5 வது ஓவரில் 3 ரன்களும் மட்டுமே கொடுத்தார். தொடர்ந்து ஐந்தாவது ஓவரை வீசியபோது அவரது கணுக்காலில் ஏற்பட்ட வலியின் காரணமாக உடனடியாக பிசியோதெரபிஸ்ட் அவரை பரிசோதித்தார்.
ஷமிக்கு காயம்
பின், அந்த ஓவர் முடிந்தவுடன் ஷமி ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். ஹர்திக் பாண்டியா ஏழாவது ஓவரை வீசினார். ஹர்திக் பாண்டியா வீசிய 9வது ஓவரில் பாபர் அசாம் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் துவக்கத்திலேயே முகமது ஷமிக்கு வலி ஏற்பட்டு இருப்பதால் அவரால் இந்த போட்டியில் தொடர்ந்து பந்து வீச முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.