ரோஹித் சர்மா செய்த தவறு; இந்திய அணி ஜெயிப்பது கஷ்டம் - முன்பே கணித்த வீரர்!
ரோஹித் சர்மா தவறு செய்துவிட்டதாக அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
IND vs NZ
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இன்றைய கடைசி நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 107 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி ஆடிய நிலையில், 2வது இன்னிங்க்ஸில் 110 ரன்கள் அடித்து வெற்றி பெற்றுள்ளது.
அஜய் ஜடேஜா பேச்சு
இதற்கிடையில், இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா, 107 ரன்கள் என்கிற சிறிய இலக்கினை வைத்து இன்று இந்திய அணி வெற்றி பெற்றால் அது சிறப்பானதாக இருக்கும். ஆனால் இந்த போட்டியில் நடைமுறையை வைத்து பார்க்கும் போது இந்திய அணி வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை.
ஏனெனில் முதல் 10 ஓவர்களில் ஈரப்பதம் இருக்கும். அதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் இந்திய அணியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்பதனால் தொடர்ச்சியாக,
அவர்களை அழுத்தத்தில் வைப்பது கஷ்டம் எனவே இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற முடியாது என கருத்து தெரிவித்திருந்தார். அதுதான் போட்டியிலும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.