கடும் விமர்சனம்; நான் அதுக்காக அவுட் ஆகல; போட்டி முடிந்த பின் சமாளித்த சுப்மன் கில்!
போட்டி முடிந்த பின் சுப்மன் கில் பேசியது கவனம் பெற்று பேசுபொருளாகியுள்ளது.
IND vs ENG
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் சுப்மன் கில் 96 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி இலக்கை நெருங்கிய வேளையில் தான் சதத்தை தவற விட்டுவிடுவோமோ என்று பெரிய ஷாட் அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில் பேட்டி
வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்கிற போது சுப்மன் கில்லின் சதத்திற்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் அவர் மீது பெரிய விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள சுப்மன் கில், நான் சதம் அடிக்க வேண்டும் என்று நினைத்து அந்த ஷாட்டை விளையாடவில்லை.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த நினைத்தேன். வெற்றிக்கு 40 முதல் 50 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தாலும் அப்படி ஒரு ஷாட்டை ஆடி இருப்பேன் நாட்டுக்காக போட்டியை வெல்வது தான் முக்கியம் என்று சமாளித்தார்.