மைதானத்தை விட்டு திடீரென வேகமாக வெளியேறிய இந்திய வீரர்கள் - என்ன நடந்தது?
மழை காரணத்தால் அறைக்கு சென்ற வீரர்கள் திரும்பவில்லை.
IND vs BAN
வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தின் போதும் மழை பெய்ததால் போட்டி தாமதமாக துவங்கியது. இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்திருந்தது.
ஆட்டம் தாமதம்
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (செப்டம்பர் 28) காலை 9.30 மணிக்கு துவங்கி இருக்க வேண்டும். ஆனால், மழையின் காரணமாக போட்டி துவங்கவில்லை. இரண்டாவது நாளின் பெரும் பகுதி ஆட்டம் மழையால் தடைபடும் என வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சுமார் 2 மணி நேரம் மைதானத்தில் காத்திருந்த இந்திய வீரர்கள் 11 மணி அளவில் மைதானத்தில் இருந்து தங்கள் ஹோட்டல் அறைக்கு திரும்பினர். மழை இடையே நின்ற போதும் அவர்கள் திரும்பவில்லை.
இந்திய அணி எதிர்பார்த்ததுபோல முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி விரைவாக விக்கெட்களை இழக்கவில்லை. எனினும், மழையால் அடிக்கடி தாமதம் ஏற்படுவதால் வங்கதேச வீரர்கள் நிலையாக பேட்டிங் செய்வதில் சிரமம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.