பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாற்றம் - 2 முன்னணி வீரர்களை நீக்கும் ரோகித்??
இந்திய அணி இன்று பலமான ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.
சூப்பர் 8
இது வரை விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி, சூப்பர் 8 சுற்றில் 2 போட்டிகள் ஆப்கனிஸ்தான் மற்றும் வங்காளதேசத்திற்கு எதிராக விளையாடி 2'யிலும் வெற்றி பெற்றுள்ளது.
இன்று ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது இந்தியா. ஆஸ்திரேலிய அணி எதிர்ப்பாராத வகையில் ஆப்கனிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது.
அது அந்த அணிக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அடுத்த சுற்றிற்கு முன்னேற, இன்று அந்த அணி வெற்றி பெறுவது முக்கியமானதாகும். இதுவரை விளையாடிய போட்டிகளில் இந்தியா அணியில் மாற்றங்களே இல்லை.
ஒரே அணி தான் களமிறங்கி வருகிறது. ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றம்
நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜடேஜா இது வரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், அவரை போல ஒரு அனுபவமான வீரர் அணியில் இருப்பது அவசியமானதாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், பேட்டிங்கில் தொடர்ந்து ஜடேஜா தடுமாறி வருவது வெளிப்படையாகவே தெரிகிறது. அதே போல, விமர்சனங்களை பெற்று வந்த துபே, வங்காளதேசத்திற்கு எதிராக சிறப்பாகவே செயல்பட்டார்.
இந்த சூழலில் தான், அணியில் மாற்றம் இருக்கும் என கேள்விகள் எழுந்துள்ளது.
ஆனால், ரோகித் சர்மா இதுவரை எதிர்கொண்ட அணிகளிலேயே மிகவும் பலமான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மாற்றத்தை செய்வார் என்பது சற்றும் நடக்காத ஒன்றே ஆகும்.